×

உலகம் முழுவதும் மீண்டும் மின்னல் வேகத்தில் கொரோனா பரவல்.. அமெரிக்காவில் ஒரே நாளில் 3.57 லட்சம் பேர் பாதிப்பு!!

ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25.36 கோடியை தாண்டியது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28.83 கோடியை தாண்டியுள்ளது.  இதன்படி உலகம் முழுவதும் தற்போது 28 கோடியே 83 லட்சத்து 71 ஆயிரத்து 233 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 25 கோடியே 36 லட்சத்து 315 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 54 லட்சத்து 52 ஆயிரத்து 663 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெறுபவர்களில் 89,845 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 55,609,910 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். +33,030 பேர் மட்டுமே கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். ஒரே நாளில் கொரோனாவால் +713 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் பிரான்ஸ் 6வது இடத்தில் உள்ளது. பிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் 232,200 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மொத்தம் 53,540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 189 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனில் கொரோனா வைரஸ் 189,846 பேரை பாதித்துள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 12,937,886 பேராக அதிகரித்துள்ளது….

The post உலகம் முழுவதும் மீண்டும் மின்னல் வேகத்தில் கொரோனா பரவல்.. அமெரிக்காவில் ஒரே நாளில் 3.57 லட்சம் பேர் பாதிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Corona ,US ,Geneva ,
× RELATED சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது